கூடங்குளம் மின்சாரத்தில் பெரும்பகுதி தமிழகத்துக்கு வேண்டும்: மக்களவையில் அதிமுக வலியுறுத்தல்

கூடங்குளம் மின்சாரத்தில் பெரும்பகுதி தமிழகத்துக்கு வேண்டும்: மக்களவையில் அதிமுக வலியுறுத்தல்
Updated on
1 min read

கூடங்குளம் அணுமின் நிலையத் தில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் பெரும்பகுதியை தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டும் என அதிமுகவின் நாடாளுமன்ற கட்சித் தலைவர் தம்பிதுரை மக்களவையில் புதன்கிழமை வலியுறுத்தினார்.

இதுபற்றி பட்ஜெட் விவாதத்தின் போது தம்பிதுரை கூறியதாவது:

நாடு முழுவதும் மின் தட்டுப்பாடு இருப்பதை அனைவரும் அறிவர். அதுபோல் தமிழகத்திலும் மின் பற்றாக்குறை நிலவுகிறது. இந்தப் பிரச்சினையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் ஒதுக்க வேண்டும்.

கூடங்குளம் அணு மின் நிலையம் தமிழகத்தில் அமைந் திருப்பதால், அதன் உற்பத்தியில் பெரும்பகுதியை தமிழகத்துக்கு வழங்க வேண்டும். இந்த அணு மின் நிலையங்களை அமைக்க திட்டமிட்டபோது, பல மாநிலங் கள் மறுத்து விட்ட சூழலில், அதை அமைக்க முன்வந்த மாநிலங் களுக்கு அதற்கான பலனை அளிப்பது அவசியம்.

கங்கை நதியை சுத்தம் செய்யும் திட்டத்துக்காக ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால் காவிரி உட்பட தென்னிந்திய மாநிலங்க ளில் ஓடும் ஆறுகள் புறக்கணிக் கப்பட்டுள்ளன.

நாட்டில் உள்ள கங்கை ஆறு மட்டுமல்லாது, வேறு பல முக்கிய ஆறுகளும் அசுத்தமாகி உள்ளன. குறிப்பாக, தென்னிந்தியாவின் காவிரி, கோதாவரி, கிருஷ்ணா மற்றும் மேற்கு வங்கத்தின் பிரம்மபுத்திரா ஆகிய ஆறுகள் அசுத்தமாகி உள்ளன. இவற்றை பராமரிப்பதற்கு குறைந்தபட்சம் ஒரு ஆறுக்கு ரூ.100 கோடியாவது ஒதுக்க வேண்டும்.

ரூ.7,060 கோடி செலவில் அமைக்கப்படும் 100 நவீன சிறு நகரங்களில் தமிழகத்தின் பொன்னேரியும் சேர்க்கப்பட்டுள் ளதை வரவேற்கதக்கது. சென்னை-பெங்களூரு தொழிலக நெடும்பாதையால் தமிழகத்தின் ஒரு சிறுபகுதி மட்டுமே பயன்பெறும். மற்ற பகுதிகள் புறக்கணிக் கப்பட்டுள்ளன. இதை தமிழகத்தின் தென் பகுதிகளுக்கும் நீட்டிக்க வேண்டும் என தம்பிதுரை கோரினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in