Published : 15 Nov 2017 02:01 PM
Last Updated : 15 Nov 2017 02:01 PM

உ.பி.யில் பாஜக எம்எல்ஏவுக்கு கால் பிடித்துவிட்ட தொண்டர்: சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ

 உத்தரப் பிரதேச பாஜக எம்எல்ஏவுக்கு தொண்டர் ஒருவர் கால் பிடித்துவிடும் வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளதால், காங்கிரஸ், பாஜகவினர் தீவிரமான தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு அலகாபாத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாஜக எம்எல்ஏ நந்த் கோபால் அதன்பிறகு பாஜக கட்சி அலுவலகத்தில் படுத்துக் கொண்டு ஓய்வு எடுத்திருந்தார்.

அப்போது அவரது கட்சியைச் சேர்ந்த தொண்டர் ஒருவர் அவருக்கு கால் பிடித்துவிடும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்த வீடியோ காட்சி உத்தரப் பிரதேச பாஜகவினரிடயே பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x