

ஜம்மு: இமயமலையில் 3888 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகை கோயிலுக்கான யாத்திரை கடந்த ஜூலை 1-ம் தேதி தொடங்கியது. இதுவரை 4.3 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் அமர்நாத் குகையில் உள்ள லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர்.
அமர்நாத் கோயிலுக்கு செல்லும் 32-வது யாத்ரீகர் குழு இமயமலை அடிவாரத்திலிருந்து வியாழக்கிழமை தனது பயணத்தை தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தக் குழுவில் 1,198 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில், 1,023 ஆண்கள், 116 பெண்கள், 58 சாதுக்கள் மற்றும் ஒரு குழந்தையும் அடங்குவர்.