மங்களூரு ரயில் நிலையம் புனரமைப்பு: ஆக.6-ல் பிரதமர் மோடி அடிக்கல்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: மங்களூரு ஜங்ஷன் உள்ளிட்ட ரயில் நிலையங்களின் புனரமைப்பு பணிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வரும் ஞாயிற்றுக்கிழமை (ஆக.6) அடிக்கல் நாட்டுகிறார்.

கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஜங்ஷன் ரயில் நிலையத்தை அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் சர்வதேச தரத்துக்கு மேம்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ரூ.19.32 கோடி செலவிலான இத்திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வரும் ஞாயிற்றுக்கிழமை காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டுகிறார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன் கடந்த பிப்ரவரி 1-ம் தேதி தனது பட்ஜெட் உரையில், “தக் ஷின கன்னடா மாவட்டத்தில் மங்களூரு ஜங்ஷன், மங்களூரு சென்ட்ரல், பன்ட்வால், சுப்ரமண்யா ரயில் நிலையங்கள் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படும்" என அறிவித்தார். அதன்படி மங்ளூரு ஜங்ஷன் ரயில் நிலையமேம்பாட்டுப் பணி தொடங்கப்படவுள்ளது. மற்ற ரயில் நிலையங்களின் மேம்பாட்டுப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் தர்ஷன் நகர், பாரத் குண்ட் ஆகிய ரயில் நிலையங்கள் முறையே ரூ.20 கோடி மற்றும் ரூ.16 கோடி செலவில் மேம்படுத்தப்பட உள்ளன.

இப்பணிகளுக்கும் பிரதமர் மோடி வரும் ஞாயிற்றுக்கிழமை காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டுகிறார்.

இதுகுறித்து பைசாபாத்எம்.பி. லல்லு சிங் கூறும்போது, “அயோத்தியில் அம்ருத் திட்டத்தின் கீழ் தர்ஷன் நகர், பாரத் குண்ட் ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. இதற்கான நிதியை ரயில்வே அமைச்சகம் விடுவித்துள்ளது. தர்ஷன் நகர், பாரத் குண்ட் உட்பட 20-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களின் மேம்பாட்டுப் பணிக்கு பிரதமர் வரும் 6-ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in