

பனாஜி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கோவாவுக்கு தனிப்பட்ட முறையில் புதன்கிழமை பயணம் மேற்கொண்டார்.
இதுகுறித்து கோவா காங்கிரஸ் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், “ராகுல் காந்தி தனது சொந்த காரணங்களுக்காக கோவாவில் பயணம் மேற்கொண்டார். தபோலிம் விமான நிலையத்தை புதன்கிழமை இரவு வந்தடைந்த அவர் தலைநகர் பனாஜிக்கு அருகில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கினார். அங்கு கோவா காங்கிரஸ் எம்எல்ஏக்களை சந்தித்துப் பேசிய ராகுல் இரவு உணவை அவர்களுடன் சாப்பிட்டார்” என்றார்.
40 உறுப்பினர்களைக் கொண்ட கோவா சட்டப்பேரவையில் காங்கிரசுக்கு 3 எம்எல்ஏக்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.