Published : 06 Jul 2014 09:00 AM
Last Updated : 06 Jul 2014 09:00 AM

பெங்களூரில் இன்று கருணாநிதி பிறந்த நாள் விழா: கர்நாடகவில் திமுக மீண்டும் தேர்தலில் பங்கேற்குமா?

கர்நாடக மாநில திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை அக்கட்சியின் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான மு.கருணாநிதியின் 91-வது பிறந்தநாள் விழா வெகுவிம ரிசையாக கொண்டாடப் படுகிறது.

இவ்விழாவில் கர்நாடக மாநிலத்தில் உள்ள நலிவடைந்த திமுக தொண்டர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இது தொடர்பாக கர்நாடக மாநில திமுக அமைப்பாளர் ந.ராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

''கர்நாடக மாநில திமுக சார்பில் பெங்களூரில் உள்ள ராமசந்திரபுரத்தில் உள்ள கலைஞரகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதியின் 91-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது.அப்போது திமுக அலுவலகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மு.க. ஸ்டாலின் மணிவிழா அரங்கத்தை திமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான‌ டி.கே.எஸ்.இளங்கோவன் திறந்து வைக்கிறார்.

அதனைத் தொடர்ந்து 91 பெண்களுக்கு இலவச சேலைகளும், 91 மாணவர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகங்களும் வழங்கப்படுகின்றன.

1960-களில் இருந்து கர்நாடகத்தில் கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர்களில் பல தொண்டர்கள் தற்போது நலிவுற்று இருக்கிறார்கள்.அவர்க‌ளுக்கு கர்நாடக மாநில திமுகவின் சார்பாக நிதி உதவி வழங்க முடிவு செய்துள்ளோம்.

இந்த விழாவில் திமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான‌ டி.கே.எஸ்.இளங்கோவன்,முன்னாள் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் இரா.தாமரைச்செல்வன்,கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான‌ டி.செங்குட்டுவன் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் கலந்துகொள்கிறார்கள். மாலை 6 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் சிறப்பு ரையாற்ற இருக்கிறார்கள்' 'என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் உள்ளிட்ட அனைத்து தேர்தல்களிலும் அதிமுக போட்டியிடுகிறது. அதேபோல திமுகவும் போட்டியிட வேண்டும் என்ற குரல் அக்கட்சி தொண்டர்களிடையே பலமாக எழுந்துள்ளது.

இதன் காரணமாகவே முன்பை காட்டிலும் கர்நாடக மாநில திமுக தற்போது அமைப்பு ரீதியாக பலப்படுத்தும் முயற்சியை தொடங்கியுள்ளதாகக் கூறப் படுகிற‌து.

1960 முதல் 1988-வரை கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி, சட்டமன்றத் தேர்தல்களில் திமுகவை சேர்ந்த பலர் போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x