Last Updated : 30 Nov, 2017 04:49 PM

 

Published : 30 Nov 2017 04:49 PM
Last Updated : 30 Nov 2017 04:49 PM

அயோத்தி விவகாரம்: 27 ஆண்டுகளுக்குப் பின் முலாயம் சிங் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு

 

அயோத்தியில் கரசேவகர்கள் மீது கடந்த நவம்பர் 2, 1999-ல் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் கொல்லப்பட்டவர்களில் ஒருவரது மனைவி, அதற்கு காரணம் முலாயம் சிங் யாதவ் எனக் கோரி பைஸாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

கடந்த 1990-ல் உ.பி.யில் சமாஜ்வாதி தலைமையில் முதல்வராக அக்கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் இருந்தார். அப்போது அயோத்தியில் ராமர் கோயில் கட்ட கரசேவகர்கள் தடையை மீறி புறப்பட்டனர். இதனால், உ.பி. காவல்துறையினர் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், சுமார் 28 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டிற்கு தாம்தான் உத்தரவிட்டதாக முலாயம் சிங் யாதவ் சமீபத்தில் பேசிய போது ஒரு மேடையில் குறிப்பிட்டிருந்தார்.

இந்தநிலையில், காயத்ரி தேவி என்பவர் பைஸாபாத்தின் மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு மனு அளித்துள்ளார். அதில், துப்பாக்கிச் சூட்டிற்கு தாம்தான் காரணம் என முலாயம் சிங் யாதவ் கூறி இருப்பதால் அவர் மீது கொலை வழக்கான ஐபிசி 302 மற்றும் 120-பி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார். இவர், உ.பி. காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் ஒருவராக ரமேஷ்குமார் பாண்டே என்பவரின் மனைவி ஆவார்.

அயோத்தி கரசேவகர்கள் மீதான துப்பாக்கிச் சூடு பற்றி மேலும் பேசிய முலாயம் சிங் யாதவ், தேவை ஏற்பட்டிருந்தால் மேலும் அதிகமானவர்களை கூட சுட்டுக் கொன்றிருப்போம் எனவும், ஏனெனில் இது இந்திய நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஒற்றுமை சம்மந்தப்பட்ட விஷயமாகவும் எனத் தெரிவித்திருந்தார். காயத்ரி தேவியின் வழக்கை பைஸாபாத் நீதிமன்றம் வரும் டிசம்பர் 5-ம் தேதி விசாரணை செய்ய உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x