கர்நாடகாவில் இலவச திட்டங்களால் பால், தயிர், காய்கறி, மது, வாகனங்கள் விலை உயர்வு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

இதனால் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அடிப்படை கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய முடியாமல் அரசு திண்டாடி வருகிறது.

இந்நிலையில் ல் அத்தியாவசிய பொருட்களின் விலை 10 முதல் 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. குறிப்பாக தக்காளியின் விலை பன்மடங்கு உயர்ந்து ரூ.160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல கேரட், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள் ஒரு கிலோ ரூ.100-க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், ஆகஸ்ட் 2ம் தேதி முதல் கர்நாடக பால் கூட்டமைப்பு சார்பில் விற்பனை செய்யப்படும் ‘நந்தினி' பாக்கெட் பால் விலை லிட்டருக்கு ரூ.3 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று முதல் கடைகளில் டீ, காபி, பால் உள்ளிட்ட‌வற்றின் விலை ரூ.5 முதல் ரூ.10 வரை அதிகரித்துள்ளது. நெய், தயிர் விலையும் அதிகரித்துள்ளது.

மதுவகைகளை பொறுத்தவரை பீர், ரம், விஸ்கி உள்ளிட்டவை பாட்டிலுக்கு ரூ.8 முதல் ரூ.25 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட வரி 9 முதல் 15% வரை அதிகரித்துள்ளதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in