Last Updated : 09 Nov, 2017 08:52 PM

 

Published : 09 Nov 2017 08:52 PM
Last Updated : 09 Nov 2017 08:52 PM

நிர்வாகக் கட்டிடத்துக்கு அருகில் பிரியாணி சமைத்த 4 மாணவர்களுக்கு ஜே.என்.யு. அபராதம்

சர்ச்சை புகழ் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக நிர்வாக அலுவலகக் கட்டிடம் அருகே பிரியாணி சமைத்ததாக 4 மாணவர்களுக்கு பல்கலைக் கழக அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.

இது குறித்து பல்கலைக் கழகத்தின் தலைமை ஒழுங்குக் கண்காணிப்பு அதிகாரி கவுஷல் குமார் அனுப்பிய நோட்டீஸின் படி 4 மாணவர்களுக்கும் ரூ.6,000 ரூ.10,000 வரை அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார்.

“அட்மின் பிளாக்கில் படிக்கட்டருகே பிரியாணி சமைத்து சாப்பிட்டது விசாரணையில் தெரியவந்தது, இது விதிமீறல் ஆகவே கண்டிப்பான ஒழுங்கு நடவடிக்கைக்குரியது” என்று பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.

இனி இம்மாதிரி செயல்படக்கூடாது என்று கடும் எச்சரிக்கையுடன் 10 நாட்களுக்குள் அபராதத்தை செலுத்தினால் மேலும் கடும் நடவடிக்கைகளிலிருந்து தப்பலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

மாணவர்கள் தரப்பில் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது, மாணவர்களுக்கிடையே பிணைப்பை ஏற்படுத்துவதற்காக இந்த மாதிரி செய்வது வழக்கம்தான், ஜே.என்.யு போன்ற வளாகங்களில் ஒழுங்குக் கட்டுப்பாட்டாளர் ஒருவர் யார் பிரியாணி சமைக்கிறார்கள், சாப்பிடுகிறார்கள் என்று கண்காணிப்பதுதான் வேலையா என்று மாணவர் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x