மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க மாநிலங்களவைத் தலைவர் முயற்சி

மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க மாநிலங்களவைத் தலைவர் முயற்சி
Updated on
1 min read

புதுடெல்லி: மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று காலையில் மாநிலங்களவை கூடியதும், மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி பதில் அளிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். இதையடுத்து, இது தொடர்பாக குறுகிய கால விவாதம் நடத்த தயார் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதன்படி, விதி எண் 176-ன் கீழ் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதத்தை தொடங்குமாறு அசாம் எம்.பி. பிரேந்திர பிரசாத் வைஸ்யாவை அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் கேட்டுக் கொண்டார். ஆனால், விதி எண் 267-ன் கீழ் (அனைத்து அலுவல்களையும் நிறுத்த வேண்டும்) விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர். குறிப்பாக விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்றும் பிரதமர் மோடி அவையில் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

அமைதி காக்குமாறு அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் விடுத்த கோரிக்கையை உறுப்பினர்கள் ஏற்காமல் கோஷம் எழுப்பினர். இதனால் ஏற்பட்ட அமளியால் அடுத்தடுத்து அவை ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் கடைசியாக 3.30 மணிக்கு அவை கூடியபோதும் இதே நிலை நீடித்ததால், நாள் முழுவதும் அவை ஒத்தி வைக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in