திருச்சியில் இருந்து ஷார்ஜா சென்ற விமானம் திருவனந்தபுரத்தில் அவசரமாக தரையிறக்கம்

திருச்சியில் இருந்து ஷார்ஜா சென்ற விமானம் திருவனந்தபுரத்தில் அவசரமாக தரையிறக்கம்
Updated on
1 min read

திருவனந்தபுரம்: திருச்சியில் இருந்து ஷார்ஜா நோக்கிச் சென்ற விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திருவனந்தபுரத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

ஏர் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று (Air India Express Flight 613) இன்று காலை திருச்சியில் இருந்து ஷார்ஜா புறப்பட்டது. அந்த விமானத்தில் 154 பயணிகள் இருந்தனர். இந்நிலையில், மதியம் 12.03 மணியளவில் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக விமானம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது என்றும் ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். பாதுகாப்பு காரணங்களுக்காக விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் பத்திரமாக இருக்கின்றனர் என்றும் அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in