தமிழகத்துக்கு மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என அதிமுக திருச்சி தொகுதி எம்.பி. குமார் மக்களவையில் வியாழக்கிழமை கோரிக்கை விடுத்தார்.
இதுபற்றி மக்களவையில் அவர் பேசியதாவது:
ஒதுக்கீட்டின்படி, தமிழகத்துக்கு மாதம் 65,140 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் அனுப்பப்பட வேண்டும். ஆனால், கடந்த 2010-ம் ஆண்டுவரை மாதம் 58,780 கிலோ லிட்டர் மட்டுமே அனுப்பப்பட்டது.
இதைத்தொடர்ந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த ஜூன் 3-ம் தேதி பிரதமரிடம் அளித்த மனுவில், மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதன்பிறகும் மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயுத் துறை அமைச்சகம், ஜுலை- 1ம் தேதி 29,060 கிலோ லிட்டர் மண் ணெண்ணெய் மட்டுமே ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது. இது தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட அநீதி. நிர்ணயிக்கப்பட்ட அளவான 65,140 கிலோ லிட்டரை தமிழகத்துக்கு உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.

கும்பகோணம் மகாமகம்
மயிலாடுதுறை தொகுதி அதிமுக எம்.பி. பாரதி மோகன் பேசும்போது, “வரும் 2016-ம் ஆண்டு நடைபெறவுள்ள கும்பகோணம் மகாமகம் நிகழ்ச்சிக்கு ஒரு கோடி பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களை இணைக்கும் வகையில் கும்பகோணம்-விருத்தாசலம் அகல ரயில்பாதை பணியை உடனடியாக நிறைவு செய்ய வேண்டும். மேலும், திருச்சி-தஞ்சாவூர் இரட்டை ரயில் பாதை அமைப்பதை கும்பகோணம் வரை நீட்டிக்க வேண்டும்” என்றார்.
தேசிய ஆறுகள் ஆணையம் அமைக்க வேண்டும்
ராமநாதபுரம் மக்களவை தொகுதி அதிமுக எம்பி அன்வர் ராஜா தனது கன்னிப்பேச்சில் கூறியதாவது:
நம் நாட்டில் ஒரு பகுதியில் வறட்சியும் மற்றொரு பகுதியில் வெள்ளப்பெருக்கும் ஏற்படுகிறது. மழைக் காலங்களில் பெரும்பாலான ஆறுகளில் ஓடும் நீர் வீணாகக் கடலில் கலப்பது கவலை அளிப்பதாக உள்ளது. நாட்டின் 70 சதவீத மக்கள் கிராமப் பொருளாதாரத்தை நம்பி இருப்பதால் ஆறுகளை இணைப்பது மிகவும் அவசியமாகிறது. இதன்மூலம் தண்ணீர் பங்கீடு விவகாரத்தில் மாநிலங்களுக்கு இடையே எழும் பிரச்சினைகளைத் தடுக்கவும் முடியும். அந்த வகையில் ஆறுகளை பராமரிக்கவும் அதன் நீராதாரத்தை முழுமையாக பயன்படுத்தவும் அரசியலமைப்பு சட்டப்படி தேசிய ஆறுகள் ஆணையம் அமைக்கப்பட வேண்டும். இது மத்திய தேர்தல் ஆணையத்தைப்போல் தன்னாட்சி பெற்றதாக இருக்க வேண்டும் என்றார்.