

நேஷனல் ஹெரால்ட் வழக்கில் காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரி நோட்டீஸ் அனுப்பியிருப்பது அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை என்று மத்திய அரசு மீது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
நேஷனல் ஹெரால்ட் பத்திரிகை 1938-ம் ஆண்டு ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்டது. இது 2008-ம் ஆண்டு மூடப்பட்டது.
நேஷனல் ஹெரால்ட் பத்திரி கைக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்தியதாக சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது பாஜகவைச் சேர்ந்த சுப்பிர மணியன் சுவாமி கிரிமினல் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கில் சோனியா உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 7-ல் நேரில் ஆஜராக வேண்டுமென்று ஏற்கெனவே டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர் பாக காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த சோனியா காந்தி இது தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கையில், இது மத்திய அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. இது தேர்தல் தோல்வியில் இருந்து நாங்கள் மீண்டும் எழும்பி வரு வதற்கு உதவும் என்றார்.