Published : 18 Nov 2017 04:05 PM
Last Updated : 18 Nov 2017 04:05 PM

டெல்லியில் மீண்டும் காற்று மாசு: ஒரு சில இடங்களில் பாதிப்பு

டெல்லியில் சில நாட்களாக காற்று மாசு குறைந்து வந்த நிலையில் இன்று சில இடங்களில் காற்று மாசு அளவு அதிகரித்தது. இதனால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

டெல்லி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நவம்பர் இரண்டாவது வாரத்தில் கடுமையான காற்று மாசு ஏற்பட்டது. காற்று தரக் குறியீடு (ஏக்யூஐ) பல இடங்களில் 500க்கும் அதிகமாக சென்றதால் 200 மீட்டருக்கு அப்பால் உள்ள எதையும் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. பணி மூட்டம் போன்று காற்று மாசு சூழ்ந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. முன்னே செல்லும் வாகனங்கள் தெரியாமல் தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகள் நடந்தன. டெல்லி மட்டுமின்றி டெல்லியொட்டிய ஹிரியாணா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் தேசிய தலைநகர் மண்டல பகுதிகளிலும் பாதிப்பு இருந்துது.

எனினும் சில நாட்களாக காற்று மாசு குறைந்து இயல்பு நிலைமை திரும்பி வருகிறது. இதனால் டெல்லியில் சரக்கு வாகனங்கள் மற்றும் கட்டுமான பணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை தேசிய பசுமை தீர்ப்பாயம் திரும்ப பெற்றுக் கொண்டது.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு முதல் டெல்லியின் சில பகுதிகளில் காற்று மாசு அளவு சற்று அதிகரித்துள்ளது. ஆனந்த் விஹார், பஞ்சாபி பாக் உள்ளிட்ட இடங்களில் காற்று மாசு அளவு அதிகரித்து இருந்தது. காற்று மாசுடன் கடும் பனிப்பொழிவு நிலவியதால் 49 ரயில்களின் பயண நேரம் மாற்றியமைக்கப்பட்டது. இதனிடையே டெல்லியில் மழைக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x