

சென்னைக்கு அருகில் உள்ள பொன்னேரி உள்ளிட்ட பகுதிகள் 'ஸ்மார்ட் சிட்டி'யாக மேம்படுத்துவதற்கான 'மாஸ்டர் பிளான்' திட்டம் விரைவில் இறுதியாக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய நிதியமைச்சர் பட்ஜெட் உரையில் கூறும்போது, "வட தமிழகத்தில் சென்னைக்கு அருகில் உள்ள பொன்னேரி, ஆந்திராவில் கிருஷ்ணாப்பட்டிணம், கர்நாடகாவில் தும்கூர் பகுதிகள் 'ஸ்மார்ட் சிட்டி'யாக மேம்படுத்துவதற்கான 'மாஸ்டர் பிளான்' திட்டம் விரைவில் இறுதியாக்கப்படும்" என்றார்.
இந்த மூன்று நகரங்கள் சென்னை - பெங்களூரு தொழில் தடத்தில் அமைந்துள்ளது குறிபிடத்தக்கது.
அதே போன்று சென்னை - விசாகப்பட்டிணம், பெங்களூரு - மும்பை பொருளாதார மண்டலத்திற்கான திட்டமும் இறுதியாக்கப்படும். இவை 20 தொழில் மையங்களைக் கொண்டிருக்கும் என்று அவர் தெரிவித்தார்.