Published : 12 Nov 2017 16:35 pm

Updated : 12 Nov 2017 16:35 pm

 

Published : 12 Nov 2017 04:35 PM
Last Updated : 12 Nov 2017 04:35 PM

மத்திய பிரதேசம் சித்ரகூட் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி

மத்தியப் பிரதேச மாநிலம் சித்ரகூட் சட்டப்பேரவைத் தொகுதிக்கு கடந்த நவம்பர் 9-ம் தேதி நடைபெற்ற தேர்தலுக்கான வாக்கெண்ணிக்கையில் பாஜகவை காங்கிரஸ் தோற்கடித்தது.

காங்கிரஸ் வேட்பாளர் நிலான்ஷு சதுர்வேதி, அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஷங்கர் தயாள் திரிபாதி என்பவரைக் காட்டிலும் 14,133 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

காங். வேட்பாளர் நிலான்ஷு சதுர்வேதி 66,810 வாக்குகளை எடுக்க, பாஜக வேட்பாளர் ஷங்கர் தயாள் திரிபாதி 52,677 வாக்குகளையே பெற முடிந்தது.

சாட்னா மாவட்டத்தில் பலத்த பாதுகாப்புக்கிடையே வாக்கு எண்ணிக்கை ஞாயிறு காலை 8 மணிக்குத் தொடங்கியது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரேம் சிங் (65) மரணமடைந்ததையடுத்து இந்தத் தொகுதி காலியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author