Last Updated : 01 Nov, 2017 02:30 PM

 

Published : 01 Nov 2017 02:30 PM
Last Updated : 01 Nov 2017 02:30 PM

எளிதாக தொழில் செய்யும் நாடா இந்தியா?- ஜேட்லிக்கு ராகுல் பதிலடி

 

இந்தியாவில் எளிதாக தொழில் செய்யும் வாய்ப்பு இல்லை, பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி நமது பொருளாதாரத்தை மிக மோசமாக பாதித்துள்ளது என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

தொழில் தொடங்குதல் மற்றும் வேலை வாய்ப்பை உருவாக்குதல் தொடர்பாக உலக வங்கி ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில்,மொத்தம் 190 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில், 130-வது இடத்தில் இருந்த இந்தியா 30 இடங்கள் முன்னேறி 100-வது இடத்தைப் பிடித்துள்ளது. இதுபோலவே, புதிதாக தொழில் தொடங்குவது மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான வர்த்தகத்தையும் இந்தியா எளிமைப்படுத்தி வருவதாக உலக வங்கி கூறியுள்ளது. இந்த விவரங்களை நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறி இருந்தார்.

உலக வங்கியின் இந்த ஆய்வறிக்கை பற்றி காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டரில் கூறுகையில் ''இந்தியாவில் எளிதாக தொழில் செய்யும் வாய்ப்பு இல்லை, பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி நமது பொருளாதாரத்தை மிக மோசமாக பாதித்துள்ளது. உலக வங்கியின் அறிக்கையால் நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு வேண்டுமானால் மகிழ்ச்சி இருக்கலாம். ஆனால் இந்தியாவில் எளிதாக தொழில் செய்வதன் உண்மைத்தன்மை மக்களுக்கு நன்றாகவே தெரியும்'' எனக் கூறியுள்ளார்.

இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க நிதியமைச்சர் அருண் ஜேட்லி தரும் மருந்துகள் எதுவும் பயனளிக்கவில்லை என ராகுல் காந்தி சமீபத்தில் கிண்டலாக கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x