

கொல்கத்தா மெட்ரோ ரயில் நிலையத்திற்கு மிரட்டல் அழைப்பு ஒன்று வந்ததை அடுத்து, கொல்கத்தாவின் அனைத்து ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கொல்கத்தாவில் உள்ள பார்க் ஸ்ட்ரீட் ரயில் நிலையம் தகர்க்கப்படும் என்று ரயில்வே அலுவலகத்திற்கு இன்று காலை மிரட்டல் அழைப்பு வந்ததாக காவல்துறை கண்கானிப்பாளருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து கொல்கத்தாவில் மெட்ரோ ரயில் நிலையம் உள்ளிட்ட மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில், சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அனைத்து முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், மிரட்டல் அழைப்பு, எங்கிருந்து, யாரால் விடுக்கப்பட்டது என்பது குறித்து விசாரித்து வருவதாக கொல்கத்தா மெட்ரோவின், தலைமை தகவல் அதிகாரி மஹாபத்ரா தெரிவித்திருக்கிறார்.