Published : 08 Jul 2014 02:56 PM
Last Updated : 08 Jul 2014 02:56 PM

ரயில்வே பட்ஜெட் 2014: சிறப்பு அம்சங்கள்

ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முதல் ரயில்வே பட்ஜெட் இது.

பயணிகளின் பாதுகாப்புக்கே முன்னுரிமை தரப்படும் என்ற ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட்டின் சிறப்பு அம்சங்கள் வருமாறு:

* பயணிகள் ரயில் மற்றும் சரக்கு கட்டணம் உயர்வு இல்லை.



* மும்பை - அகமதாபாத் இடையே புல்லட் ரயில்.



* அதிவேக ரயில்களுக்காக வைர நாற்கரத் திட்டம்.



* 9 மார்க்கங்களில் மணிக்கு 160-ல் இருந்து 200 கி.மீ. வரை ரயில்களின் வேகத்தை அதிகரிக்கத் திட்டம்.



* இ-டிக்கெட் சேவை: ஒரு நிமிடத்துக்கு 7200 டிக்கெட்டுகளை பதிவு செய்யும் வகையிலும், ஒரேநேரத்தில் 1.2 லட்சம் வாடிக்கையாளர்கள் இணையத்தை அணுகும் வகையிலும் தொழில்நுட்ப மேம்பாடு.



* முன்பதிவு முறைகள் சீரமைப்பு: மொபைல் போன்கள், தபால் நிலையங்கள் மூலமாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது பிரபலப்படுத்தப்படுதல்.



* ஆன்லைனிலேயே பிளாட்ஃபார்ம், முன்பதிவு இல்லாத டிக்கெட் பெறும் வசதி.



* ரயில் நிலையங்களில், ஒரே டிக்கெட்டில் வாகன நிறுத்தம் - பிளாட்ஃபார்ம் சீட்டு.



* பெண்கள் ரயில் பெட்டிகளில் பயணிக்கும் ரயில்வே பெண் போலீஸார்; 4000 பெண் போலீஸார் நியமனம்.



* அனைத்து ரயில் நிலையங்களிலும் ஓய்வறை வசதி.



* அனைத்து முக்கிய ரயில் நிலையங்களிலும் மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூத்தக் குடிமக்களுக்கு பேட்டரி மூலம் இயங்கும் கார் வசதி.



* ஐ.வி.ஆர்.எஸ் மூலம் உணவுத் தரம் குறித்து கருத்துப் பகிரும் வசதி.



* எஸ்.எம்.எஸ்., போன் மூலமாக உணவு ஆர்டர் செய்யும் வசதி.



* அனைத்து முக்கிய ரயில் நிலையங்களிலும் உணவகங்கள்.



* துப்புரவுக்கான ஒதுக்கீடு 40 சதவீதம் உயர்வு.



* தூய்மையை கண்காணிக்க சிசிடிவிக்கள் பொருத்தப்படும்.



* ரயில் நிலையங்களை மேம்படுத்த கார்ப்பரேட் நிதியம்.



* அனைத்து ரயில்களிலும் ஆர்.ஓ. சுத்திகரிப்பு வசதி பொருந்திய குடிநீர் குழாய்கள்.



* மெயின்லைன், புறநகர் ரயில் பெட்டிகளில் தானியங்கி கதவு வசதி.



* 58 புதிய ரயில்கள் மற்றும் விரிவுபடுத்தப்படும் சேவைகளின் எண்ணிக்கை 11.



* மும்பையில் 2 ஆண்டுகளில் கூடுதலாக 864 அறிமுகம்



* ரயில்களின் இயக்கம் தவிர, மற்ற ரயில்வே திட்டங்களின் அன்னிய நேரடி முதலீடு.



* ரயில்வே கட்டமைப்பு திட்டங்களில் அன்னிய நேரடி முதலீடு மற்றும் உள்நாட்டு முதலீடுகள்.



* தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில்களில் இன்டர்நெட் வசதி.



* ஏ., ஏ1 பிரிவு ரயில் நிலையங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில்களில் வைஃபை (Wi-Fi) வசதி.



* தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் அல்லாத படிப்புகளுக்கான ரயில்வே பல்கலைக்கழகம்.



* பி.பி.பி. மாதிரி மூலமாக சில ரயில் நிலையங்கள் சரவதேசத் தரமாக்கப்படும்.



* பயணிகளின் சிரமத்தைக் குறைக்க, பார்சல் சேவைக்கு தனி முனையங்கள்.



* தலா ஒரு பயணிக்கான ஒரு கிலோ மீட்டர் பயணத்தில் ஏற்படும் வருவாய் இழப்பு, கடந்த 13 ஆண்டுகளில் 10 பைசாவில் இருந்து 23 பைசாவாக அதிகரிப்பு.



* அனைத்து முக்கிய ரயில் நிலையங்களிலும் சூரிய மின்சக்தி.



* முன் எப்போதும் இல்லாத அளவில், 2014-15 நிதியாண்டின் திட்ட வரைவு ரூ.65,455 கோடி.



* 2014-15 நிதியாண்டுக்கான செலவினங்கள் ரூ.149,176 கோடி என கணிப்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x