

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட சஹாரன்பூரில், ரம்ஜான் பண்டிகையை ஒட்டி ஊரடங்கு உத்தரவு 4 மணி நேரத்திற்கு தளர்த்தப்பட்டுள்ளது.
பழைய டவுனில், காலை 7 மனி முதல் 11 மணி வரையிலும், புதிய டவுனில் பிற்பகல் 3 மணி முதல் மாலை 7 மணி வரைக்கும் ஊரடங்கு உத்தரவு தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சந்தியா திவாரி தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு உத்தரவு விலக்க்கிக் கொள்ளப்பட்டதால் இத்கா பகுதியில் பெருமளவில் தொழுகைக்காக நிறைய பேர் குவிந்திருந்தனர். இருப்பினும், கெடுபிடிகள் அதிகம் இருப்பதால் வழக்கம் போல் ரம்ஜான் பண்டிகை ஏற்பாடுகளை செய்ய முடியவில்லை என சிலர் வருத்தம் தெரிவித்தனர்.
ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட வேளையில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க கூடுதலாக காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சஹாரன்பூர் மாவட்டத்தில், கடந்த சனிக்கிழமை இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக வெடித்தது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்ட போலீஸார் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 68 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.