

ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே வியாழக்கிழமை இரவு சரக்கு ரயில் தடம் புரண்டதால், சென்னை-விஜயவாடா இடையே ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் பிட்ர குண்டாவில் இருந்து சென்னைக்கு சென்றுகொண்டிருந்த சரக்கு ரயிலின் 11 பெட்டிகள் மனுபோலு என்ற இடத்தில் தண்டவாளத்தில் இருந்து விலகி கவிழ்ந்தது. இதன் காரணமாக, இரு மார்கத் திலும் ரயில் போக்குவரத்து நிறுத்தப் பட்டது.
திருப்பதி, ரேணிகுண்டா உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பல ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப் பட்டன. சென்னை-விஜயவாடா இடையே செல்லும் ஜனசதாப்தி, பினாகினி எக்ஸ்பிரஸ், வெள்ளி, சனி ஆகிய இரு நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளன.
காகிநாடா-பெங்களூரு சேஷாத்ரி எக்ஸ்பிரஸ் வெள்ளிக் கிழமை ரத்து செய்யப்பட்டது. ஆதிலாபாத்-நாந்தேட் எக்ஸ்பிரஸும் ரத்து செய்யப் பட்டுள்ளதாக தென் மந்திய ரயில்வே அதிகாரிகள் தெரிவித் துள்ளனர். மேலும் திருமலா, நாராயணாத்ரி, எஷ்வந்த்பூர், சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில்கள் கடப்பா வழியாக மாற்று பாதையில் இயக்கப்பட்டன.
விஜயவாடா, விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் இருந்து அதிகாரிகள், வெள்ளி கிழமை காலை பாதையை சீரமைக்கும் பணி களில் ஈடுபட்டுள்ளனர். இத னால் பயணிகள் சிரமத்துக்கு உள்ளாயினர்.