மணிப்பூர் விவகாரம்: நிர்மலா சீதாராமன் வேண்டுகோள்

மணிப்பூர் விவகாரம்: நிர்மலா சீதாராமன் வேண்டுகோள்
Updated on
1 min read

குவாஹாட்டி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று குவாஹாட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கூறியதாவது: பெண்களின் ஆடைகளை களைந்து ஊர்வலமாக இழுத்துச் செல்லும் சம்பவம் தீவிரமானது.

மணிப்பூர் மாநிலம் ஒரு கடினமான கட்டத்தில் உள்ளது. அழகான மாநிலமாக அறியப்பட்ட மணிப்பூர் தற்போதைய நெருக்கடிகளிலிருந்து மீண்டு வெளியே வர வேண்டும் என்பதே அனைவரது விருப்பம்.

நேர்மையான முறையில் அந்த மாநிலத்தில் அமைதியை மீட்டெடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து முயற்சிகளை எடுக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in