

புதுடெல்லி: ஊழல் தடுப்புச் சட்டத்தில் மத்திய அரசு 2018-ல் திருத்தம் மேற்கொண்டது. அதன்படி, ஊழல் புகார் தொடர்பாக அரசு அதிகாரிகளை விசாரிக்க முன் அனுமதி பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது.
இதனால் ஊழல் வழக்கில் விசாரணை நீர்த்துப்போகும். என்று கூறி, 2018-ம் ஆண்டு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அம்மனு தொடர்பாக 4 தினங்களுக்குள் பதிலளிக்குமாறு 2019 பிப்ரவரி மாதம் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், அதன் பிறகு அந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில், அம்மனுவை விசாரணைக்கு எடுக்கும்படி மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் கோரிக்கை வைத்தார். இதையடுத்து இம்மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.