Published : 21 Jul 2023 05:59 AM
Last Updated : 21 Jul 2023 05:59 AM
அமராவதி: ‘‘நாடு முழுவதும் ஒரே மாதிரியான பெட்ரோல், டீசல் விலை அமல்படுத்தப்படுமா’’ என ராஜஸ்தானை சேர்ந்த பாஜக எம்.பி. ராகுல் கஸ்வான் கேட்ட கேள்விக்கு, மத்திய பெட்ரோலிய துறை, கடந்த ஜூலை மாதம் 18-ம்தேதி நிலவரப்படி அனைத்து மாநில தலைநகரங்களில் விற்கப்படும் பெட்ரோல், டீசல் விலை குறித்து நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளது.
அதில், ‘‘அந்தந்த மாநில வரிவிகிதத்தின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படி, நாட்டிலேயே ஆந்திர மாநிலத்தில்தான் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.111.87-க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசலை பொறுத்த வரை லட்சத்தீவுகளில் உள்ள விலையே (லிட்டர் ரூ.103.08) அதிகம்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.96.72, டீசல் ரூ.89.62, லட்சத்தீவுகளில் ரூ.108.06, டீசல் ரூ.103.08, சென்னையில் பெட்ரோல் ரூ.102.63, டீசல் ரூ.94.24, மேற்கு வங்கம் (கொல்கத்தா) பெட்ரோல் ரூ.106.03, டீசல் ரூ.92.76, கர்நாடகா (பெங்களூரு) பெட்ரோல் ரூ.101.94, டீசல் ரூ.87.89, ஒடிசா (புவனேஸ்வர்) பெட்ரோல் ரூ.103.19, டீசல் ரூ.94.76, தெலங்கானா (ஹைதராபாத்) பெட்ரோல் ரூ.109.66, டீசல் ரூ.97.82, மத்திய பிரதேசம் (போபால்) பெட்ரோல் ரூ.108.65, டீசல் ரூ.93.09, ராஜஸ்தான் (ஜெய்ப்பூர்) பெட்ரோல் ரூ.108.48, டீசல் ரூ.93.72, மணிப்பூர் (இம்பால்) பெட்ரோல் ரூ.101.23, டீசல் ரூ.87.15, புதுச்சேரியில் பெட்ரோல் ரூ.96.16, டீசல் ரூ.86.33 விலைக்கு விற்கப்படுகின்றன.
நாட்டிலேயே அந்தமான் நிக்கோபார் தீவுகளில்தான் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.01, டீசல் ரூ.79.74 என்ற அளவில் குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT