

வேளாண் பொருட்களின் விலை ஏற்ற இறக்கங்களினால் விவசாயிகள் அவதிப்படுவதைக் கவனத்தில் கொண்டு அவர்களுக்கு உதவ ரூ.500 கோடிக்கான விலை நிலைநிறுத்த நிதி ஒதுக்கப்படும் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
"விவசாயிகள் பெரும்பாலும் வேளாண் பொருட்களின் ஏற்ற இறக்கத்தினால் அவதிப்படுகின்றனர். இவர்களுக்கு உதவ ரூ.500 கோடித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்" என்று கூறிய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, கடன் தொல்லைகளிலிருந்து விவசாயிகளை மீட்க தனியாக நிதி ஒதுக்கப்படும் என்று தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.