பெங்களூருவில் தாக்குதல் நடத்த சதி: தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 5 பேர் கைது

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

பெங்களூரு: கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் தாக்குதல் நடத்த சதி செய்ததாக 5 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். கைதான சந்தேக நபர்கள் ஜுனைத், சோஹைல், உமர், முதாஷிர், ஜாஹித் எனத் தெரியவந்துள்ளது. அவர்கள்வசம் இருந்த செல்போன்கள், வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து ஐவரிடமும் விசாரணை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைதான அந்த ஐந்து பேரும் கொடுத்த தகவலின்படி மேலும் ஐந்து பேர் தேடப்பட்டு வருவதாக மத்திய குற்றப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிறையில் ஏற்பட்ட தொடர்பு: இன்று கைதான ஐந்து பேரும் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒரு கொலை வழக்கில் கைதாகி பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்கள் ஆவர். சிறையில் சில தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட தொடர்பால் அவர்கள் வெடிப்பொருட்களை கையாள்வதில் பயிற்சி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் பெங்களூருவில் பல இடங்களிலும் தீவிரவாத தாக்குதல் நடத்த இவர்கள் சதி செய்ததாக சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in