Published : 27 Nov 2017 08:54 AM
Last Updated : 27 Nov 2017 08:54 AM

பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் எந்த தேவாலயம் மீதாவது கல் வீசப்பட்டதா? - மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கேள்வி

பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றரை ஆண்டுகால ஆட்சியில் எந்த தேவாலயம் மீதாவது கல் வீசப்பட்டதா என்று மத்திய அமைச்சர் கே.ஜே.அல்போன்ஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வரும் டிசம்பர் 9 மற்றும் 14-ம் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதையொட்டி குஜராத்தின் காந்தி நகர் ஆர்ச் பிஷப் தாமஸ் மேக்வன் கடந்த 21-ம் தேதி வெளியிட்ட கடிதத்தில், மதவாத சக்திகளுக்கு எதிராக வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து மத்திய அமைச்சர் கே.ஜே.தாமஸ் டெல்லியில் அண்மையில் கடந்த நிகழ்ச்சியில் கூறியதாவது: யாரோ ஒருவர் (ஆர்ச் பிஷப் தாமஸ் மேக்வன்) நாடு முழுவதும் கிறிஸ்தவர்கள் பிரச்சினைகளை எதிர்கொள்வதாகவும் தேவாலயங்கள், கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும் கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றரை ஆண்டுகால ஆட்சியில் எந்த தேவாலயம் மீதாவது கல் வீசப்பட்டதா? எங்காவது கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டனரா? நான் கிறிஸ்தவன், தேசியவாதி என்று அறிவித்து கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன். உலகளாவிய அளவில் முதுகெலும்புள்ள மனிதர் யார் என்று தேடினால் அவர் நமது பிரதமர் நரேந்திர மோடிதான்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதே நிகழ்ச்சியில் பேசிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், நமது ஊடகங்கள் உண்மையின் பக்கம் நிற்கிறதா என்ற ஐயம் எழுகிறது என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x