கலவரத்தை சாதகமாக பயன்படுத்தி மணிப்பூரில் மேலும் ஒரு வங்கியில் கொள்ளை

கலவரத்தை சாதகமாக பயன்படுத்தி மணிப்பூரில் மேலும் ஒரு வங்கியில் கொள்ளை
Updated on
1 min read

இம்பால்: மணிப்பூரில் மைதேயி இனத்தவருக்கும் குகி பழங்குடி இனத்தவருக்கும் இடையே அரசு சலுகைகள், இட ஒதுக்கீடு தொடர்பாக தொடர்ந்து மோதல் நடைபெறுகிறது.

இந்நிலையில், கலவரம் காரணமாக காங்போக்பி மாவட்டத்தில் மணிப்பூர் மாநில கூட்டுறவு வங்கி மூடப்பட்டது. அந்த வங்கியை திறக்க கடந்த புதன்கிழமை அதிகாரிகள் சென்றனர். அப்போது, வங்கியில் உள்ள கணினி, பிரிண்டர் உட்பட மின்னணு சாதனங்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. அவற்றின் மதிப்பு ரூ.1 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் சுராசந்த்பூரில் உள்ள ஆக்ஸிஸ் வங்கி கிளையிலும் கடந்த திங்கள்கிழமை பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.2.25 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in