மகாராஷ்டிராவில் இலாகா ஒதுக்கீடு: அஜித் பவார், பிரபுல் படேல் அமித் ஷாவுடன் சந்திப்பு

மகாராஷ்டிராவில் இலாகா ஒதுக்கீடு: அஜித் பவார், பிரபுல் படேல் அமித் ஷாவுடன் சந்திப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார், மூத்த தலைவர்கள் பிரபுல் படேல், சகன் புஜ்பால், சுனில் தட்கரே
ஆகியோர் கட்சியின் பெருமளவு எம்எல்ஏ மற்றும் எம்எல்சிக்களுடன் கடந்த 2-ம் தேதி, ஆளும் சிவசேனா - பாஜக கூட்டணியில் இணைந்தனர். இதையடுத்து அஜித் பவார் துணை முதல்வராகவும் அவரது அணியை சேர்ந்த 8 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாகவும் பதவியேற்றனர்.

இந்நிலையில் நிதி, நீர்வளம் உள்ளிட்ட முக்கிய துறைகளை தேசியவாத காங்கிரஸ் கோருகிறது. இதற்கு சிவசேனா எதிர்ப்பு தெரிவிப்பதால் துறைகள் ஒதுக்கீட்டில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார், பிரபுல் படேல் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக மூத்த தலைவர்களை சந்தித்துப் பேசினர்.

இதுகுறித்து பிரபுல் படேல் கூறும்போது, “இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. கடந்த ஆண்டு பாஜகவும், சிவசேனாவும் ஆட்சி அமைத்தபோது அனைத்து துறைகளையும் பகிர்ந்து கொண்டுவிட்டதால் இலாகா ஒதுக்கீட்டில் சில சிக்கல் எழுந்துள்ளது. இப்போது எங்களுக்கு இடமளிக்க இரு கட்சிகளும் சில துறைகளை விட்டுக்கொடுக்க வேண்டும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in