

ரயில்வே பல்கலைக்கழகம் அமைப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா தனது பட்ஜெட் உரையில், “தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் அல்லாத பாடப்பிரிவுகளுடன் ரயில்வே பல்கலைக்கழகம் அமைப்பது குறித்து ஆலோசித்து வருகிறேன்.ரயில்வே தொடர்புடைய பாடங்களில் பட்டப்படிப்பு அளிக் கவும், ரயில்வே ஊழியர்களின் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கும் தொழிற்கல்வி நிறுவனங்களுடன் உடன்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்படும். கீழ்நிலை ஊழியர் களுக்கு தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் அல்லாத பிரிவு களில் உள்ளூர் தொழிற்கல்லூரி களில் குறுகிய கால பயிற்சி வழங்கப்படும்’’ என்றார்.