Published : 06 Jul 2014 09:00 AM
Last Updated : 06 Jul 2014 09:00 AM

காங்கிரஸுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்குமா?

காங்கிரஸ் எதிர்க்கட்சி அந்தஸ்து கோரும் விவகாரம் குறித்து இது வரை எந்த முடிவும் எடுக்கப்பட வில்லை.

543 உறுப்பினர்கள் கொண்ட மக்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்து பெற 10 சதவீத எம்.பி.க் களின் ஆதரவு தேவை. காங் கிரஸுக்கு தற்போது 44 எம்.பி.க்கள் மட்டுமே உள்ளனர். இருப்பினும் அந்தக் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்து கோரி வருகிறது.

இந்த விவகாரம் குறித்து பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பாக முடிவு செய்யப்படும் என்று மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரி வித்திருந்தார்.

இந்நிலையில் டெல்லியில் சனிக் கிழமை நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இதுகுறித்து எதுவும் பேசப்படவில்லை.

முன்னதாக மக்களவை காங் கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார் ஜுன கார்கே சபாநாயகர் சுமித்ரா மகாஜனை சந்தித்துப் பேசினார். ஆனால் இந்தச் சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று அறிவிக்கப் பட்டது.

மேலும் அனைத்துக் கட்சிக் கூட் டத்துக்குப் பிறகு நிருபர்களிடம் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, எதிர்க்கட்சி அந்தஸ்து விவகாரம் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப் படவில்லை என்று தெரிவித்தார்.

இதனிடையே எதிர்க்கட்சி அந்தஸ்து கோரி சபாநாயகரிடம் காங்கிரஸ் முறைப்படி விண்ணப்பிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x