

பாட்னா: ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்தபோது, பலர் தங்கள் நிலங்களை லாலு குடும்பத்தினருக்கு குறைந்த விலைக்கு விற்றும், தானமாக கொடுத்தும் ரயில்வே வேலை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பான வழக்கில் சிபிஐ கடந்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதில் பிஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் பெயரும் இடம் பெற்றுள்ளது.இந்நிலையில், பிஹார் சட்டப் பேரவை நேற்று காலையில் கூடியதும், துணை முதல்வர் தேஜஸ்வி பதவி விலக வலியுறுத்தி பாஜக எம்எல்ஏ.க்கள் அவையின் மையப் பகுதிக்கு சென்று கோரிக்கை விடுத்தனர். இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால் அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.