Published : 10 Jul 2014 03:44 PM
Last Updated : 10 Jul 2014 03:44 PM

குஜராத்தில் சர்தார் படேல் சிலை: மத்திய பட்ஜெட்டில் ரூ.200 கோடி ஒதுக்கீடு

நாட்டின் ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் விதமான ஒருமைப்பாடு சிலைக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.200 கோடி ஒதுக்கபட்டுள்ளது.

மக்களவையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் அருண் ஜேட்லி, ஒருமைப்பாட்டின் குறியீடாக சர்தார் வல்லபாய் படேல் சிலை உருவாக்கப்படவுள்ளது. இதற்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கபட்டுள்ளது.

குஜராத் அரசு இந்தச் சிலையை எழுப்புகிறது. அதற்கு நிதியுதவியாகவே இந்த ரூ.200 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. 'இரும்பு மனிதர்’ என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேல் சிலை 182 மீட்டர் உயரம் கொண்டதாக இருக்கும்.

பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போதே சர்தார் வல்லபாய் படேலுக்கு சிலை எழுப்பப்படும் என்று பேசி வந்தார். இந்தச் சிலையை எழுப்ப ரூ.2500 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் சுதந்திரா சிலை 93 அடிதான் அதனை முறியடிக்கும் விதமாக தற்போது 182 அடியில் ஒருமைப்பாட்டின் சின்னமாக வல்லபாய் படேல் சிலை எழுப்பப்படவுள்ளது.

மானுட வளர்ச்சி குறியீட்டில் உலக சராசரிக்கும் கீழ் இந்தியா இருக்கிறது, பிறப்பிலேயே இறக்கும் குழந்தைகளின் விகிதம், கல்வி, தனி நபர் வருமானம் உள்ளிட்ட பிற மானுட நலன்களில் இந்தியா உலக அளவில் பின் தங்கியிருக்கும்போது பெரும் செலவில் சிலை வைக்கும் திட்டம் சரிதானா என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x