Published : 30 Jun 2014 11:08 AM
Last Updated : 30 Jun 2014 11:08 AM

நம்மால் முடியும்: கிராவிட்டி படத்தை மேற்கோள்காட்டி இஸ்ரோவில் பிரதமர் மோடி பேச்சு

நாட்டின் சாதாரண மக்களும் பயன் படுத்தும் வகையில் தொழில்நுட் பங்களை விஞ்ஞானிகள் கொண்டு சேர்க்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீஹரிகோட்டாவில் திங்கள் கிழமையன்று பிஎஸ்எல்வி சி-23 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப் பட்டது. இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டினார். பின்னர் அவர் பேசியதாவது:

5 வெளிநாடுகளின் செயற்கை கோள்களுடன் பிஎஸ்எல்வி சி23 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இதன் மூலம் ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் மகிழ்ச்சியும், பெருமையும் ஏற்பட் டுள்ளது. இந்த வெற்றியின் மூலம் எலைட் குரூப் எனப்படும் உலகின் வல்லரசு நாடுகளின் பட்டியலில் நாமும் இணைந்துள்ளோம்.

2015-ல் சந்திராயன்-2

இந்தியாவின் விண்வெளித் திறன் உலகுக்கு காட்டப்பட்டுள் ளது. இதுவரையில், பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் மொத்தம் 67 செயற் கைகோள்களை விண்ணுக்கு அனுப்பியுள்ளோம். இதில் 19 நாடு களைச் சேர்ந்த 40 செயற்கை கோள்களும் அடங்கும். குறிப்பாக பிரான்ஸ், கனடா, ஜெர்மனி, சிங்கப் பூர் ஆகிய நாடுகளும் அடங்கும்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இருக்கும்போது, நிலவுக்கு சந்திரா யன் ராக்கெட்டை அனுப்பும் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டன. இதில், நாம் வெற்றியை கண்டுள்ளோம். சந்திராயன்-2, 2015 அல்லது அதற்கு முன்பே விண்ணில் செலுத்தப் படும். இதுவரையில், ராக்கெட்கள் அனைத்தும் நம் சொந்த தொழில் நுட்பம் மூலமே அனுப்பப்பட்டுள் ளது. இதற்காக நாம் பெருமைப் பட வேண்டும். இந்திய விண்வெளி திட்டங்கள் மக்களின் பயன்பாட் டிற்கும், முன்னேற்றத்திற்கும் பயன் படுத்தப்படுகிறது.

சார்க் செயற்கைக்கோள்;

நமது நாட்டின் வளர்ச்சி மட்டுமின்றி நம் அண்டை நாடுகளின் வளர்ச்சி யும் முக்கியமானதாகும். நம் பக்கத்து நாடுகளுக்கு நாம் பரிசளிக் கும் வகையில் அதிநவீன சார்க் செயற்கைக் கோள் உருவாக்கப் பட வேண்டும். அது சார்க் நாடு களின் வறுமையையும் அறியாமை யையும் போக்கும் வகையில் இருக்க வேண்டும்.

பேரிடர் மேலாண்மை திட்டம் மூலம் நாம் 30 நாடுகளுக்கு தொழில் நுட்ப உதவிகளை வழங்கி வரு கிறோம். தற்போதைய தொழில்நுட் பத்தை விட, இன்னும் அதிகமான தொழில்நுட்பங்கள் தேவை. நாட்டின் சாதாரண மக்களுக்கு தொழில்நுட்பங்களை கொண்டு சேர்க்க விஞ்ஞானிகள் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்.

இந்திய விண்வெளி தொழில் நுட்பத்தை அறிந்து கொள்ளும் வகையில், நாட்டின் பல்வேறு இடங் களில் டிஜிட்டல் தொழில்நுட்ப வசதி யுடன் கூடிய அருங்காட்சியகங் களை அமைக்க வேண்டும். இந்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இளம் விஞ்ஞானிகளை ஊக்குவிக்க சிறப் பான பயிற்சிகளை அளிக்க வேண் டும். உலக அளவில் இந்திய விண் வெளி தொழில்நுட்பம் மற்ற நாடு களுக்கு முன்உதாரணமாக திகழ் கிறது. மங்கள்யான் விண்கலம் இன்னும் சில மாதங்களில் இறுதி கட்ட பணிகள் முடித்து விண்ணுக்கு செலுத்தப்படவுள்ளது. இதில், வெற்றியடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

பிரதமர் மோடி பேசும்போது, ஒட்டுமொத்த விஞ்ஞானிகளும் சுமார் 30 நிமிடங்கள் நின்றுக் கொண்டே அவரது பேச்சை கேட்ட னர். விழா முடித்த பின்னர், குண்டு துளைக்காத விமானம் மூலம் பிரதமர் மோடி, சென்னை விமான நிலையத்துக்கு புறப்பட்டு சென் றார். சென்னை விமான நிலையத் தில் இருந்து மதியம் 12.15 மணிக்கு டெல்லி புறப்பட்டு சென்றார்.

ஹாலிவுட் படத்தை ஒப்பிட்டு பேசிய மோடி

ஸ்ரீஹரிகோட்டாவில் பிரதமர் மோடி பேசுகையில், ஹாலிவுட் படமான ‘கிராவிட்டி’யை ஒப்பிட்டு பேசினார். “ஹாலிவுட்டில் எடுக்கப்பட்ட ‘கிரா விட்டி’ என்ற திரைப்படத்தை உரு வாக்க, இஸ்ரோ அனுப்பிய மங்கள் யான் விண்கலத்தை செலுத்த ஆன செலவைவிட அதிகம் செலவான தாக அறிந்தேன். எனவே, குறைந்த செலவில் இஸ்ரோ விஞ்ஞானிகள் மகத்தான சாதனையை செய்து வருவதை நாம் காண்கிறோம். இது, நம் விஞ்ஞானிகளின் திறமையை காட்டுகிறது” என்றார்.

அங்குள்ள இஸ்ரோ விஞ்ஞானி களுடன் பேசுகையில், "4 தலை முறை விஞ்ஞானிகள் இங்கு இருப் பதை கண்டு மகிழ்ச்சியடைகிறேன். இந்த குழுவில் இளம் விஞ்ஞானி கள் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x