

தான் ஒரு கிறிஸ்தவ இந்து என்று கூறியது யாரையேனும் புண்படுத்தியிருந்தால் அதற்காக வருந்துகிறேன் என கோவா துணை முதல்வர் பிரான்சிஸ் டிசோசா தெரிவித்துள்ளார்.
கோவா அமைச்சர் தீபக் தவாலிகர் கடந்த வாரம் சட்டப் பேரவையில் பேசும்போது, “மோடியின் தலைமையில் இந்தியா இந்து நாடாக உருவெ டுக்கும்” எனப் பேசியிருந்தார்.
அது தொடர்பாகப் பேசிய கோவா துணை முதல்வர் “இந்தியா ஏற்கெனவே இந்து நாடுதான். இந்துஸ்தானத்திலுள்ள நான் உட்பட அனைத்து இந்தியர்களும் இந்துக்கள்தான். நான் கிறிஸ்தவ இந்து” எனக் கூறியிருந்தார். கிறிஸ்தவ இந்து எனக் கூறியிருந்ததற்கு, கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கண்டனம் தெரிவித் திருந்தனர். கோவாவின் மூத்த மத குருக்களுள் ஒருவரான பிரான்சிஸ் எரெமிட்டோ ரெபெல் லோ கூறும்போது, “அவர் தன்னை எப்படி கிறிஸ்தவ இந்து எனக் கூறலாம்; இந்திய கிறிஸ்தவன் என்று கூறிக் கொள்ளலாம்” எனக் கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து பிரான்சிஸ் டிசோசா வருத்தம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: நான் யாருடைய மன உணர்வுகளை யாவது புண்படுத்தி யிருந்தால் அதற்காக மன்னிப்புக் கோரு கிறேன். உங்களைப் பொறுத்த வரையில் எனது கருத்து தவறு. ஆனால், என்னைப் பொறுத்த வரையில் அது சரிதான். இந்து எனது கலாச்சாரம். கிறிஸ்தவம் எனது மதம். நான் இந்து எனக் கூறும்போது அது கலாச்சாரத்தையே குறிக் கிறது; மதத்தை அல்ல.
கிறிஸ்தவம் 2,000 ஆண்டுகள் பழமையானது. ஆனால், இந்து மதம் 5,000 ஆண்டுகள் பழமை யானது. இவ்வாறு, டிசோசா தெரிவித்துள்ளார்.