வாரிசு அரசியலை வளர்க்க ஒன்று சேர்ந்த ஊழல் கட்சிகள் - மத்திய அமைச்சர் அமித் ஷா சாடல்

வாரிசு அரசியலை வளர்க்க ஒன்று சேர்ந்த ஊழல் கட்சிகள் - மத்திய அமைச்சர் அமித் ஷா சாடல்
Updated on
1 min read

புதுடெல்லி: ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியது: பிஹார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டிய கூட்டம் வாரிசுகளின் எதிர்காலத்தை மட்டுமே சிந்தித்து நடத்தப்பட்டதாகும். ராகுலை பிரதமராக்க 21 ஊழல் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன.

பாட்னாவில் ஒன்றுகூடிய 20-21 ஊழல் கட்சிகளும் மக்கள் நலனைப் பற்றி சிந்திக்கவில்லை. மாறாக தங்கள் மகன்களின் எதிர்காலத்தை பற்றியே சிந்திக்கின்றன. ஆனால் பாஜக நாட்டின் வளர்ச்சியை பற்றி மட்டுமே சிந்திக்கிறது. ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் சிறைக்கு அனுப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுக்கிறது.

சோனியாவின் வாழ்க்கை லட்சியம் ராகுலை பிரதமராக்குவதே. அதேபோன்று, லாலு தனது மகன் தேஜஸ்வியை பிரதமராக்க ஆசைப்படுகிறார்.

மம்தாவின் ஒரே லட்சியம் அவரது அண்ணன் மகன் அபிஷேக்கை முதல்வராக்குவது. ஸ்டாலின் தன் மகன் உதயநிதியை முதல்வராக்க ஆர்வமாக உள்ளார்.அதேபோன்று கெலாட் ஆர்வம்அவரது மகன் வைபவை முதல்வராக்குவது. இப்படிப்பட்டவர்களால் உங்களுக்கு நல்லது செய்ய முடியுமா என்பதை சிந்தித்துப்பார்க்க வேண்டும்.

2024-ல் பாஜக மிகப்பெரிய பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிஅமைக்கும். மோடி மீண்டும் பிரதமர் பதவியில் அமர்வார். இவ்வாறு அமித் ஷா பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in