Published : 30 Jun 2023 07:50 AM
Last Updated : 30 Jun 2023 07:50 AM
திருப்பதி: திருப்பதி கோவிந்தராஜர் கோயிலில் அபிதேயக அபிஷேகம் என்றழைக்கப்படும் ஜேஷ்டாபிஷேகம் இன்று வெள்ளிக்கிழமை தொடங்கி, ஜூலை மாதம் 2-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
திருப்பதியில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலக வளாகத்தில் உள்ள போலீஸ் பயிற்சி மைதானத்தில் நேற்று சதுர்வேத ஹோம பூஜைகள் ஆகம சாஸ்திரப்படி தொடங்கியது. இதில் 32 வேத பண்டிதர்கள் கலந்து கொண்டனர். ஜூலை 5-ம் தேதி வரை நடைபெறும் இந்த சதுர்வேத ஹோம பூஜைகளில் தேவஸ்தான அதிகாரிகள் உட்படபலர் பங்கேற்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT