Published : 15 Jul 2014 11:03 AM
Last Updated : 15 Jul 2014 11:03 AM

நரேந்திர மோடி- ஜி ஜின்பிங் சந்திப்பு: எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காண முக்கிய ஆலோசனை

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை சந்தித் துப் பேசினார். அப்போது எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து இரு நாட்டுத் தலைவர் களும் முக்கிய ஆலோசனை நடத்தினர்.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான பிரிக் ஸின் 6-வது உச்சி மாநாடு பிரேசிலில் உள்ள போர்டலிசா நகரில் செவ் வாய்க்கிழமை தொடங்கியது. முதல்நாளில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். சுமார் 80 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பின்போது எல்லைப் பிரச்சினை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

இந்தப் பிரச்சினை காரணமாக 1962-ல் இருநாடுகளுக்கும் இடையே போர் மூண்டது. அதன் பின்னர் இப்போதுவரை இருநாடு களுக்கும் இடையே பதற்றம் நீடித்து வருகிறது. இந்திய நிலப் பரப்பில் 38,000 சதுர கிலோமீட்டரை சீனா ஆக்கிரமித்துள்ளதாக இந்தியாகுற்றம் சாட்டி வருகிறது. இதேபோல் அருணாசலப் பிரதே சத்தில் 90,000 சதுர கிலோமீட்டர் பகுதியை இந்தியா ஆக்கிரமித் துள்ளதாக சீனா பழிசுமத்தி வருகிறது.

கடந்த ஆண்டில் லடாக் பகுதியில் சீன ராணுவம் ஊடுருவியதால் இருநாட்டுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டது. இந்தியாவின் கடும் எதிர்ப்பால் சீன ராணுவம் வாபஸ் பெறப்பட்டது. இப்போதைய நிலையில் இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லைப் பகுதி யில் சுமார் 4000 கி.மீட்டர் தொலை வுக்கு பிரச்சினை நீடிக்கிறது.

மோடி யோசனை

இதுகுறித்து அதிபர் ஜி ஜின்பிங் கிடம் பேசிய பிரதமர் மோடி, எல்லைப் பிரச்சினைக்கு அமைதி வழியில் விரைந்து தீர்வு காண வேண்டும், ஒட்டுமொத்த உலகத் துக்கும் இது ஒரு முன்னுதாரண மாக அமைய வேண்டும் என்று யோசனை கூறினார்.

இரு நாடுகளிடையே பரஸ்பரம் நம்பகத்தன்மையை வளர்க்க வேண்டும், எல்லையில் அமைதி யைக் கட்டிக் காப்பாற்ற வேண்டும் என்றும் மோடி அறிவுறுத்தினார்.

ஜி ஜின்பிங் பதில்

இதற்குப் பதிலளித்துப் பேசிய அதிபர் ஜி ஜின்பிங், இருநாடு களுக்கும் இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைக் களைய வேண்டும், கட்டுப்பாட்டை கடைப் பிடிக்க வேண்டும். எல்லைப் பிரச்சினைக்கு இருதரப்பும் ஏற்கும் நியாயமான தீர்வைக் காண வேண்டும் என்று தெரிவித்தார். இந்தியாவும் சீனாவும் சந்தித் துப் பேசினால் உலகமே திரும்பிப் பார்க்கிறது என்று அதிபர் ஜின்பிங் குறிப்பிட்டார்.

கைலாஷ்-மானசரோவருக்கு புதிய பாதை

உள்கட்டமைப்பு, தொழில் பூங் காக்கள், முதலீடு ஆகிய துறை களில் இருநாடுகளிடையே உறவை வலுப்படுத்த வேண்டும் என்று மோடி கேட்டுக் கொண்டார்.

மேலும் கைலாஷ்-மானசரோவர் புனித யாத்திரைக்கு புதிய பாதையை திறக்க வேண்டும் என்றும் அதிபர் ஜி ஜின்பிங்கிடம் மோடி வலியுறுத்தினார்.

அபெக் மாநாட்டுக்கு அழைப்பு

21 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஆசிய-பசிபிக் பொருளா தார ஒத்துழைப்பு (அபெக்) அமைப்பின் மாநாடு நவம்பரில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற் குமாறு பிரதர் மோடிக்கு அதிபர் ஜின்பிங் அழைப்பு விடுத்தார். இவை தவிர பிராந்திய, சர்வ தேச விவகாரங்கள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர்.

இந்தியா வருகிறார் ஜின்பிங்

இந்தச் சந்திப்பின்போது வரும் செப்டம்பரில் இந்தியா வரும் பயணத் திட்டத்தை அதிபர் ஜி ஜின்பிங் உறுதி செய்தார். மேலும் பெய்ஜிங் வருமாறு பிரதமர் மோடிக்கு அவர் மீண்டும் அழைப்பு விடுத்தார். அதன்படி நவம்பரில் மோடி பெய்ஜிங் செல்லக்கூடும் என்று தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x