

தபால்துறைத் திட்டங்களில் இதுவரைப் பயன்படுத்தப்படாமல் இருக்கும் பெரும் தொகை இனி பயன்படுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
அதாவது இந்தத் தொகை மூத்தக் குடிமகன்களில் நலத்திட்டத்திற்குப் பயன்படுத்தப்படவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
"தபால்துறைத் திட்டங்களில் மிகப்பெரிய அளவிலான தொகை இதுவரை பயன்படுத்தப்படாமல் உள்ளது. ஆகவே அதனை எப்படி பயன்படுத்துவது என்பதை முடிவு செய்ய குழு ஒன்றை அமைக்க நான் முன்மொழிந்துள்ளேன்.
இந்தக் குழு தனது முடிவுகளை டிசம்பர் மாதம் அறிக்கையாகச் சமர்ப்பிக்கும்” என்றார் அருண் ஜேட்லி.