யூடியூபர் தேவ்ராஜ் படேல் சாலை விபத்தில் மரணம்

யூடியூபர் தேவ்ராஜ் படேல்
யூடியூபர் தேவ்ராஜ் படேல்
Updated on
1 min read

ராய்ப்பூர்: யூடியூப் பிரபலம் தேவ்ராஜ் படேல் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். வீடியோ எடுக்க பைக்கில் சென்ற போது லாரி மோதி அவர் உயிரிழந்துள்ளார் என தகவல்.

'Dil se bura lagta hai' என்ற வீடியோ மூலம் அவர் பிரபலமானர். லாரி மோதியதில் அவரது தலை மற்றும் உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்ற சூழலில் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவரது மரணத்திற்கு சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அவரது மரணத்திற்கு யூடியூப் பயனர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in