Published : 26 Jun 2023 06:42 AM
Last Updated : 26 Jun 2023 06:42 AM

பிரதமர் நரேந்திர மோடி இதுவரை பெற்ற 13 சர்வதேச விருதுகள்

பிரதமர் மோடி | கோப்புப்படம்

பிரதமர் நரேந்திர மோடி இதுவரை 13 நாடு களின் உயரிய விருதுகளை பெற்றுள்ளார். அதன் விவரம் வருமாறு:

  • தீவு நாடான பப்புவா நியூ கினி, பிரதமர் மோடிக்கு அந்த நாட்டின் மிக உயரிய கம்பேனியன் ஆப் தி ஆர்டர் ஆப் லோகோஹு' விருதை வழங்கியது
  • பிஜி நாட்டின் உயரிய விருதான ‘கம்பேனியன் ஆப் தி ஆர்டர் ஆப் பிஜி' பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது.
  • கடந்த மே மாதம், பலாவ் நாட்டின் அதிபர் சுராங்கல் எஸ். விப்ஸ் ஜூனியர், பிரதமர் நரேந்திர மோடிக்கு ‘பலாவ் குடியரசு எபகல் விருதை' வழங்கினார்.
  • கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பரில் பூடானின் மிக உயர்ந்த விருதான ‘ஆர்டர் ஆப் தி ட்ருக் கியால்போ'வை பிரதமர் நரேந்திர மோடி பெற்றார்.
  • கடந்த 2020 -ம் ஆண்டில் அமெரிக்க அரசு சார்பில் லெஜியன் ஆப் மெரிட்' என்ற விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது.
  • கடந்த 2019-ம் ஆண்டில், பஹ்ரைன் அரசு சார்பில் பிரதமர் மோடிக்கு ‘கிங் ஹமாத் ஆர்டர் ஆப் தி ரினைசன்ஸ்' விருது அளிக்கப்பட்டது.
  • கடந்த 2019-ம் ஆண்டில் மாலத்தீவு அரசு சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ‘ஆர்டர் ஆப் தி டிஸ்டிங்கிஸ்ட் ரூல் ஆப் நிஷான் இசுதின்' விருது வழங்கப்பட்டது.
  • கடந்த 2019-ம் ஆண்டில், ரஷ்யாவின் மிக உயரிய விருதான ‘ஆர்டர் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரூ விருது' பிரதமர் நரேந்திர மோடிக்கு அளிக்கப்பட்டது.
  • கடந்த 2019-ம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆப் சயீத் விருது' பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.
  • கடந்த 2018-ம் ஆண்டில் பாலஸ்தீனம் சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு வெளிநாட்டு பிரமுகர்களுக்கான உயரிய விருதான ‘கிராண்ட் காலர் ஆப் தி ஸ்டேட் ஆப் பாலஸ்தீன விருது' அளிக்கப்பட்டது.
  • கடந்த 2016-ம் ஆண்டில், ஆப்கானிஸ் தானின் மிக உயரிய விருதான ‘ஸ்டேட் ஆர்டர் ஆப் காஜி அமீர் அமானுல்லா கான்' பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.
  • சவுதி அரேபிய அரசு சார்பில் முஸ்லிம் அல்லாத தலைவர்களுக்கு அந்த நாட்டின் உயரிய கவுரவமான ‘ஆர்டர் ஆஃப் அப்துல் அஜீஸ் அல் சவுத்' விருது வழங் கப்படுகிறது. கடந்த 2016-ம் ஆண்டில் இந்த விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது.
  • தற்போது எகிப்து அரசின் மிக உயரிய விருதான ‘‘ஆர்டர் ஆப் தி நைல்’’ விருது வழங்கப்பட்டிருப்பதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடி இதுவரை 13 நாடுகளின் சர்வதேச விருதுகளை பெற்றிருக்கிறார்.

இவை தவிர ஐ.நா. சுற்றுச்சூழல் துறையின் உயரிய விருதான தி எர்த் விருது, பில் கேட்ஸ் அறக்கட்டளையின் தூய்மை இந்தியா விருது, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் சர்வதேச எரிசக்தி, சுற்றுச்சூழல் விருது, சியோல் கலாச்சார அறக்கட்டளையின் சியோல் அமைதி விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளையும் பிரதமர் நரேந்திர மோடி பெற்றுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x