

ஆந்திர பிரதேச மாநிலம், போலாவரம் நீர்தேக்கம் தொடர்பான மறுசீரமைப்பு திருத்த மசோதா இன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
மக்களவையில் இன்று, தெலங்கானாவுடன் சீமாந்திராவின் சில பகுதிகளை இணைத்தபடியாக, போலாவரம் நீர்த்தேக்க திட்ட மசோதா, தெலங்கானா ராஷ்டீரிய சமிதி உள்ளிட்ட கட்சிகளின் கடும் அமளிகளுக்கிடையே தாக்கல் செய்யப்பட்டது.
மேலும், போலாவரம் திட்டத்தினால் பாதிக்கப்பட்ட அந்த பகுதி மக்களை மறு குடியமர்த்துவதற்கான ஆந்திர மறுசீரமைப்பு தொடர்பான திருத்த மசோதாவும் இதனுடன் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு பின் பேசிய ஆந்திர நிதி அமைச்சர் யனமாலா ராமகிருஷ்ணடு, "இந்த அவசர சட்ட மசோதா, பல்நோக்கு திட்டத்தை முழுமையாக நடத்த ஏதுவாக இருக்கும். அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்த திட்டத்தை நிறைவேற்றுவோம்" என்றார்.