போலி செய்தி பரப்பினால் கடும் நடவடிக்கை: சித்தராமையா எச்சரிக்கை

போலி செய்தி பரப்பினால் கடும் நடவடிக்கை: சித்தராமையா எச்சரிக்கை
Updated on
1 min read

பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று பெங்களூருவில் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு கூறியதாவது: கர்நாடகாவில் காங்கிரஸ் அரசுக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறான தகவல்கள் அதிகம் பரப்பப்படுகின்றன.

போலி செய்திகள் பரப்புவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு உள்துறை அமைச்சருக்கு உத்தரவிட்டேன். பெங்களூரு காவல் ஆணையர் அலுவலகத்தில் இதற்கென தனிப் பிரிவை உருவாக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. சைபர் கிரைம் போலீஸாரில் இதற்காக தனிப் பிரிவு உருவாக்கப்பட்டு, அவர்கள் சமூக வலைதளங்களை கண்காணிப்பார்கள். இவ்வாறு முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in