மோடி அலை விரைவில் சுனாமியாக மாறும்: அமித் ஷா பேச்சு

மோடி அலை விரைவில் சுனாமியாக மாறும்: அமித் ஷா பேச்சு
Updated on
1 min read

வாரணாசி தொகுதியில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வரும் 24ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்வார் என்றும் அதன் பின்னர் மோடி அலை சுனாமியாக மாறும் என்று அக்கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய அமித் ஷா, கடந்த 10 ஆண்டுகளில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அனைத்து துறைகளிலும் செயலிழந்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் பேசிய அவர், நாடு முழுவதும் மோடி அலை வீசுகிறது. வாரணாசி தொகுதியில் மோடி வேட்பு மனுவினை தாக்கல் செய்த பின்னர் நாடெங்கும் வீசி வரும் மோடி அலை சுனாமியாக மாறும் என்றார்.

தேர்தல் பிரச்சாரத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்ட பிறகு நிருபர்களிடம் இன்று அமித் ஷா செய்தியாளர்களிடம் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in