ஆந்திராவில் சர்வதேச கல்வி திட்டம் - முதல்வர் ஜெகன்மோகன் அறிவிப்பு

ஆந்திராவில் சர்வதேச கல்வி திட்டம் - முதல்வர் ஜெகன்மோகன் அறிவிப்பு
Updated on
1 min read

விஜயவாடா: ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் ‘ஜகனண்ணா ஆனிமுத்தியாலு’ எனும் அரசு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.இதில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி முக்கிய விருந்தினராக பங்கேற்றார். நடந்து முடிந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மற்றும் இண்டர்மீடியட் தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுத்த அரசுப் பள்ளி மற்றும் ஜூனியர் கல்லூரி மாணவ, மாணவியருக்கு அவர் ரொக்கப் பரிசுகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் முதல்வர் ஜெகன்மோகன் பேசியதாவது: ஆந்திர மாணவர்கள் சர்வதேச அளவில் போட்டியிட்டு வாழ்க்கையில் பல முன்னேற்றங்களை காண வேண்டும். இதற்காக பள்ளி மற்றும் கல்லூரிகளில் சர்வதேச கல்வி திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும். தேர்வு முறையிலும் மாற்றம் கொண்டுவந்த நாங்கள், விரைவில் மாணவ, மாணவியர் சர்வதேச அளவில் சென்று படிக்க வேண்டும் என விரும்புகிறோம். அதே சமயம், தனியார் பள்ளிகளுக்கு சமமாக அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தி உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in