தீவிரவாதி துண்டா மீது ‘தடா’ சட்டத்தில் குற்றச்சாட்டுகள்: டெல்லி போலீஸ் மனு

தீவிரவாதி துண்டா மீது  ‘தடா’ சட்டத்தில் குற்றச்சாட்டுகள்: டெல்லி போலீஸ் மனு
Updated on
1 min read

தீவிரவாதி அப்துல் கரீம் துண்டா மீது ‘தடா’ சட்டப் பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய வேண்டும் என்று கோரி டெல்லி போலீஸ் சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் நடந்த 22 குண்டுவெடிப்புகள் உட்பட இந்தியா முழுவதும் 33 குண்டு வெடிப்பு வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் அப்துல் கரீம் முண்டா. லஷ்கர் இ தொய்பா தீவிரவாதியான முண்டா கடந்த ஆண்டு இந்திய நேபாள எல்லையில் கைது செய்யப்பட்டார்.

தீவிரவாதி முண்டா மீது வழக்கு தொடரப்பட்டு நீதிமன்ற விசாரணையில் இருந்து வருகிறது. முண்டாவின் கூட்டாளிகள் ஐந்து பேர் ஏற்கெனவே கைது செய்யப் பட்டுள்ளனர். இவர்கள் மீது 94-ம் ஆண்டு 150 கிலோ வெடிபொருட் கள் மற்றும் ஆயுதங்கள் கைப் பற்றப்பட்டது உள்ளிட்ட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

முண்டா தவிர மற்ற ஐந்து பேர் மீது ‘தடா’ சட்டப் பிரிவுகளில் தொடரப்பட்ட குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்த நீதிமன்றம் வெடி பொருட்கள் பதுக்கல் சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கியது.

அப்துல் கரீம் முண்டா மீதான வழக்கை டெல்லி கூடுதல் குற்ற வியல் நீதிபதி பாரத் பராசர் விசா ரித்து வருகிறார்.

முண்டா மீது ‘தடா’ சட்டப் பிரிவு 3(3), மற்றும் பிரிவு 5-ன் படியும் வெடிபொருட்கள் பதுக் கல் தடைச் சட்டம் பிரிவு 5-ன் படியும் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 120-பி-ன் கீழும் வழக்குப் பதிவு செய்யக் கோரி டெல்லி போலீஸார் மனு தாக்கல் செய்துள்ளனர்.

வெடிபொருள் பதுக்கல் தடைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுக்கான முகாந்திரம் இருப்பதை நீதிமன்றம் ஏற்கனவே ஏற்றுக் கொண்டுள்ளது. தீவிரவாதி முண்டா சார்பில் ஆஜ ரான வழக்கறிஞர் எம்.எஸ்.கான், ‘குற்றச்சதி குறித்த குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் ‘தடா’ பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர முடியாது’ என்று வாதிட்டார்.

இதுகுறித்து வரும் 28-ம் தேதி முடிவு செய்யப்படும் என்று நீதிபதி அறிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in