Published : 12 Jul 2014 09:30 AM
Last Updated : 12 Jul 2014 09:30 AM

கூத்தாட்டுக்குளம் கோயிலில் மருந்து பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி: ஜூலை 17-ல் தொடங்கி ஆகஸ்ட் 16 வரை நடைபெறுகிறது

கேரள மாநிலம் கூத்தாட்டுக்குளம் நெல்லிக்காட்டு பகவதி கோயிலில் ஆடி மாத மருந்து பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி வரும் 17-ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 16-ம் தேதி வரை நடக்கிறது.

கேரள மாநிலத்தின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ளது கூத்தாட்டுக்குளம் நெல்லிக்காட்டு பகவதி கோயில். கோட்டயத்தில் இருந்து 37 கி.மீ. தூரத்திலும் எர்ணாகுளத்தில் இருந்து 46 கி.மீ. தூரத்திலும் உள்ளது.

இங்குள்ள ஸ்ரீதரீயம் ஆயுர்வேத கண் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மைய நிர்வாகத்தின் கீழ் இக்கோயில் உள்ளது. நம்பூதிரி குடும்பத்தினரால் நிர்வகிக்கப் பட்டுவரும் இக்கோயில் பாரம்பரியப் பெருமை மிக்கது. பிரம்மனின் அருள்படி, தேவலோக மருத்துவர் களான அஷ்வினி குமாரர்களால் இக்கோயில் பிரதிஷ்டை செய்யப் பட்டது என்பது ஐதீகம்.

நோய் தீர்க்கும் மருந்து, பிரசாதமாக வழங்கப்படுவது இக்கோயிலின் தனிச்சிறப்பு. அம்மன் விக்கிரகம் முன்பு மருத்துவ சாஸ்திர விதிமுறைகளின்படி நோய் தீர்க்கும் மருந்து தயாரிக்கப்படுகிறது. இதைப் பெற்றுச் செல்பவர்கள் 41 நாட்கள் அருந்தி விரதம் இருந்தால் நோய்கள், பூர்வஜென்ம பாவம் அகலும் என்பது நம்பிக்கை.

ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் மருந்து பிரசாதம் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு ஆடி முதல் நாளான ஜூலை 17-ம் தேதி முதல் ஆகஸ்ட் 16-ம் தேதி வரை தினமும் காலை 6 மணி முதல் 10.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரையும் மருந்து பிரசாதம் வழங்கப்படும்.

இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சி யான, மருந்து பொங்கலிடும் நிகழ்ச்சி ஜூலை 21-ம் தேதி காலை 9 மணிக்கு நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் தலைவர் நாராயணன் நம்பூதிரி தலைமையில் ஹரி நம்பூதிரி உள்ளிட்ட நிர்வாகிகள் செய்துவருகின்றனர்.

பூஜை விவரங் களுக்கு 094966 20092, 094961 34500 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ள லாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x