ஒடிசா | ஒரு கிலோ ரூ. 2.5 லட்சத்துக்கு விற்பனையாகும் விலை உயர்ந்த மாம்பழங்கள் திருடுபோயின

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

நுவாபாடா: ஒரு கிலோ ரூ. 2.5 லட்சத்துக்கு விற்பனையாகும் விலை உயர்ந்த மாம்பழங்கள் ஒடிசா மாநிலத்தில் திருடுபோயுள்ளன.

ஒடிசாவின் நுவாபாடா மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமி நாராயணன் என்பவர், தனது விவசாய தோட்டத்தில் சுமார் 38 வகையிலான மாம்பழ ரகங்களை சாகுபடி செய்துள்ளார். அவற்றின் மதிப்பு குறித்து நன்கு அறிந்த அவர், அது குறித்த தகவலையும், மாம்பழங்களின் புகைப்படங்களையும் சமூக வலைதளங்கள் மூலம் வெளியிட்டார். இதில் விலை உயர்ந்த மாம்பழ ரகமும் அடங்கும்.

லட்சுமி நாராயணன் பெருமையுடன் மாம்பழங்கள் குறித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்த அடுத்த சில மணி நேரங்களில், தோட்டத்தில் இருந்த விலை உயர்ந்த 4 மாம்பழங்கள் நான்கு திருடப்பட்டுள்ளன. இந்த ரக மாம்பழங்களின் விலை கிலோ ரூ.2.5 லட்சம் என சொல்லப்படுகிறது. விலை உயர்ந்த மாம்பழங்கள் திருடுபோன சம்பவம் லட்சுமி நாராயணன் மற்றும் உள்ளூர் மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in