Published : 10 Oct 2017 05:53 AM
Last Updated : 10 Oct 2017 05:53 AM

பல்கலைக்கழகங்களுக்கு மதரீதியாக வைக்கப்பட்டுள்ள ‘இந்து’, ‘முஸ்லிம்’ பெயர்களை நீக்க பரிந்துரை

பல்கலைக்கழகங்கள் பெயரில் ‘இந்து’, ‘முஸ்லிம்’ என்ற மத ரீதியான வார்த்தைகளை நீக்க பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) விசாரணைக் குழு ஒன்று பரிந்துரை செய்துள்ளது.

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் உட்பட 10 மத்திய பல்கலைக்கழகங்களில் முறைகேடு புகார்கள் குறித்து விசாரிக்க யுஜிசி சார்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்தப் பல்கலைக்கழகங்களில் யூஜிசி குழு பலகட்ட விசாரணை நடத்தியது. இதில் அலிகர் முஸ்லிம் பல்கலை.யின் தணிக்கை அறிக்கையில் இக்குழு தனது பரிந்துரைகளை அளித்துள்ளது.

“மத்திய அரசின் நிதியுதவி பெறும் பல்கலைக்கழகங்கள் மதச்சார்பற்ற நிறுவனங்களாக இருக்க வேண்டும். ஆனால், அலிகர் முஸ்லிம் பல்கலை., பனாரஸ் இந்து பல்கலை. ஆகியவற்றின் பெயர்களில் உள்ள ‘இந்து’, ‘முஸ்லிம்’ ஆகிய வார்த்தைகள் மதச்சார்பற்ற தன்மையை பிரதிபலிக்கவில்லை. எனவே, மதத்தின் பெயர்களை குறிப்பிடும் அந்த வார்த்தைகளை நீக்கிவிட்டு அலிகர் பல்கலை., பனாரஸ் பல்கலை. என்று அழைக்கலாம். அல்லது இவற்றை நிறுவியவர்களின் பெயர்களை வைக்கலாம்” என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x