Published : 26 Oct 2017 09:56 AM
Last Updated : 26 Oct 2017 09:56 AM

ரூ.6,000 கோடி முதலீட்டில் ஐடிஐ மேம்பாடு

மேகாலாயாவின் ஷில்லாங் நகரில் ஐடிஐ மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதை மத்திய திறன் மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் அனந்த் குமார் ஹெக்டே நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது அவர் பிடிஐ செய்தியாளரிடம் கூறும்போது, “ஐடிஐ-க்களை வலுப்படுத்த உலக வங்கியுடன் இணைந்து ரூ.6000 கோடி முதலீட்டில் புதிய திட்டம் தொடங்கியுள்ளோம். இதன் மூலம் ஐடிஐ-க்களின் தரம் மேம்படுத்தப்படும். மோசமான செயல்பாடு கொண்ட 400 ஐடிஐ-க்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது” என்றார்.

மேகாலயாவில் பல்வேறு ஐடிஐ-க்கள் மற்றும் திறன் மேம்பாட்டு மையங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்யவும் இவற்றின் செயல்பாடு குறித்து மக்களின் கருத்துகளை அறியவும் அமைச்சர் இங்கு வந்திருந்தார்.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x